ட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, முள்ளிக்குப்பம், சீனிவாசபுரம், முள்ளிமாநகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் இன்று (செப்.29) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தையொட்டி அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் எதிரே உள்ள விளையாட்டுத் திடலில் கருப்புக் கொடிகளை ஏற்றி மீனவர்கள் போராட்டத்தைத் தொடங்கினர். புதிய தலைமைச் செயலகம் தொடர்பான அரசாணை எண் 564-ஐ திரும்பப் பெற வேண்டும் என்றும், தங்களுக்குச் சொந்தமானதாக மீனவர்கள் கூறும் பூர்வீக நிலத்தை பட்டாவுடன் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
புதிய தலைமைச் செயலகம் அமைந்தால் மீன்பிடித் தொழில், வலைகளை உலர்த்துதல் மற்றும் பழுதுபார்த்தல், படகுகளை நிறுத்துதல், லூப் சாலையில் நடைபெறும் மீன் வியாபாரம் உள்ளிட்ட வாழ்வாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம் என்பது போராட்டக்காரர்களின் முக்கியக் கவலையாக உள்ளது.





















