புதுடெல்லி: ரூ.2,000 வரையிலான UPI பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என வங்கிகள் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவை வழங்குநர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரூ.2,000 வரை மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மற்றும் RuPay டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ கட்டணம் வசூலிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், ரூ.2,000-க்கும் அதிகமான UPI பரிவர்த்தனைகளுக்கு, விதிகளின்படி கட்டணம் வசூலிக்க வாய்ப்பு உள்ளது. 2025-26ஆம் ஆண்டில் நடைபெற்ற UPI பரிவர்த்தனைகளில் ரூ.2,000-க்கும் அதிகமான தொகைக்கான பரிவர்த்தனைகள் சுமார் 4 சதவீதம் மட்டுமே என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், சிறிய தொகைகளை UPI மூலம் பரிவர்த்தனை செய்யும் பொதுமக்களுக்கு இந்த அறிவிப்பு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடவடிக்கையாகவும் இது பார்க்கப்படுகிறது.





















