சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 3) அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கம் காணப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்துள்ளது.
இதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,13,920-க்கும், ஒரு கிராம் ரூ.14,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.290 அதிகரித்துள்ளது.
மேலும், சென்னையில் வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.55 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.


















