சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிகப் பயன்பாட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.10.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த மாதம் ரூ.2,906-க்கு விற்பனை செய்யப்பட்ட வணிக சிலிண்டர், தற்போது ரூ.2,916.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோகத்திற்கு 14.2 கிலோ சிலிண்டர்களையும், ஹோட்டல் உள்ளிட்ட வணிகப் பயன்பாட்டிற்கு 19 கிலோ சிலிண்டர்களையும் விற்பனை செய்கின்றன. சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதந்தோறும் சிலிண்டர் விலைகள் மாற்றியமைக்கப்படுகின்றன.
அதேநேரத்தில், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் தொடர்ந்து ரூ.957.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


















