நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே 4 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பாதிரியார் ஆபிரகாமுக்கு நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு மேல இலந்தைகுளம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ திருச்சபைக்கு வந்த 4 சிறுமிகளை சட்டவிரோதமாக அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆபிரகாம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், சம்பவத்தை வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக சிறுமிகளை மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கில் போலீசார் தாக்கல் செய்த ஆதாரங்கள் மற்றும் அரசு தரப்பு வாதங்களை பரிசீலித்த நீதிபதி சுரேஷ்குமார், ஆபிரகாம் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி மரண தண்டனை விதித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





















