சட்டப் பேரவை கூட்டத்தின் போது முதலமைச்சர் விஜய், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வாகன வசதி செய்து தரப்படும் என்று அறிவித்தார்.
அப்போது பேசிய அவர், மக்களாட்சியின் மிக முக்கிய தூண்களில் ஒன்றாக விளங்குபவர்கள் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள். தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் எளிய பின்னணியில் இருந்து பணபலமோ, அரசியல் பின்னணியோ இன்றி மக்களின் பேராதரவோடு முதன்முறையாக சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் தலைமுறை சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
பொருளாதார பலமில்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பணியாற்றும் மற்றும் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்களது மக்கள் பணியைத் தொய்வின்றி தொடர்வதற்கும், அவர்கள் தங்களது தொகுதிப் பணிகளைத் திறம்பட மேற்கொள்வதற்கு வசதியாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துகொள்வதாக கூறினார்.





















