திமுக ஆட்சிக்காலத்தில் 2021ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை செந்தில் பாலாஜி மின்துறை அமைச்சராக பதவி வகித்தார். அவரின் பதவிக் காலத்தில் மின்மாற்றிகள் கொள்முதல் செய்தது தொடர்பாக ரூ.397 கோடி ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மின்சாரத்துறை சார்பாக அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் கடந்த திமுக ஆட்சியில் Conductor கொள்முதல் தொடர்பான 9 டெண்டர்களில் சுமார் ஆயிரத்து 28 கோடிரூபாய் அளவிற்கு புதிய முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.
தற்போது மின்மாற்றிகள் கொள்முதல் செய்வதற்கு விடப்பட்ட 9 டெண்டர்களில் ரூ.1028 கோடி முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழகம் முழுவதும் 51 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் அண்ணாநகர், பெருங்குடி உள்ளிட்ட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.





















