சென்னை தலைமைசெயலகத்தில், முதலமைச்சர் விஜய் இந்து சமய அறநிலையத் துறை சார்பில், விருதுநகர் மாவட்டம், இருக்கண்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் 23 கோடியே 67 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முடிகாணிக்கை மண்டபம், அன்னதானக் கூடம், விருந்து மண்டபங்கள் மற்றும் 235 பூஜைப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 36 உதவிப் பொறியாளர்கள் (கட்டுமானம்), 38 உதவி ஸ்தபதிகள், 6 செயல் அலுவலர்கள் (நிலை-1 மற்றும் நிலை-3) என மொத்தம் 80 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், வணிகவரி, பதிவுத்துறை மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் குமரகுருபரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டாக்டர் டி.ஜி. வினய், கூடுதல் ஆணையர் முனைவர் துரை ரவிச்சந்திரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.





















