இன்றும், நாளையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வட தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தின் மற்ற இடங்களில், இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். வரும் 13ம் தேதி வரை இதே நிலை நீடிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





















