• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
எடப்பாடியாருக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது-முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

எடப்பாடியாருக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது-முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

September 29, 2022
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

October 5, 2026
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

October 5, 2026
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, October 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்|தற்போதைய செய்திகள்

எடப்பாடியாருக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது-முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

by Namadhu Amma
September 29, 2022
in சிறப்பு செய்திகள்|தற்போதைய செய்திகள்
0
எடப்பாடியாருக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது-முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
494
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

விருதுநகர்

திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். எடப்பாடியாருக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்று திருவில்லிபுத்தூரில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டணம் ஆகியவற்றை உயர்ததி விடியா தி.மு.க. அரசை கண்டித்து இன்று 29-ந்தேதி
காலை 9 மணிக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் சிவகாசி அருகே திருத்தங்கல் அண்ணாமலையார் நகர் அம்மா திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது.

இக்கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிகேசாமி பங்கேற்று எழுச்சி உரையாற்றுகிறார்.

இதற்காக பிரமாண்டமான முறையில் மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த கண்டன பொதுக்கூட்டம் குறித்து ஆலோசனைக்கூட்டம் விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் தொகுதி வாரியாக நடைபெற்றது.

அதன்படி திருவில்லிபுத்தூில் திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பாக நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

விடியா தி.மு.க அரசை கண்டித்து சிவகாசியில் நடைபெறும் இந்த மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

கண்டன பொதுக்கூட்டம் ஏற்பாடுகள் குறித்து விருதுநகர் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பாக விருதுநகரிலும், சிவகாசி சட்டமன்ற தொகுதி கழகம் சார்பாக சிவகாசியிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து தற்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் தொண்டர்கள், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் கூலிங் சீட் கொண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

கழகத்தில் உறுப்பினராக இருப்பதே பெருமை. அண்ணா திமுகவை அழிக்க கருணாநிதியும் முயற்சி செய்தார். அவரது மகன் ஸ்டாலினும் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கின்றார். அது நடக்கவே நடக்காது. அண்ணா திமுகவின் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டே தான் இருக்கின்றது.

திமுகவின் இந்த ஒன்றரை ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்தில் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது. இதனால் திமுக அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய் விட்டது.

அதிமுகவின் செல்வாக்கு எடப்பாடியார் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டே வருகின்றது. ஆகையால் கண்டன பொதுக்கூட்டத்திற்கு சிவகாசி வருகை தரும் எடப்பாடியாருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்க வேண்டும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி அண்ணா திமுகவின் எக்கு கோட்டையாகும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா, இரட்டை இலை சின்னம், எடப்பாடியார் என அதிமுகவிற்கு விசுவாசமான தொண்டர்கள் இருக்கும்வரை அண்ணா திமுகவை யாராலும் அழிக்க முடியாது.

அண்ணா திமுக எங்கே இருக்கின்றதோ அங்கு நாம் இருப்போம். இரட்டை இலை சின்னம் எங்கே இருக்கின்றதோ அங்கு கட்சியினர் இருப்பார்கள். கட்சி இருக்கும் இடத்தில் தான் எடப்பாடியார் இருக்கின்றார்.

எடப்பாடியார் இருக்கும் இடத்தில் நாம் இருக்கின்றோம். அண்ணா திமுகவை இரட்டை இலை சின்னத்தை யார் காப்பாற்றுகின்றார்களோ அவர்களுக்கு பின்னால் நிற்க வேண்டியது நமது கடமை.

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி மக்கள் எடப்பாடியாரை திரண்டு வந்து திருவிழா போன்று வந்து வரவேற்க வேண்டும். கட்சிக்கு போஸ்டர் ஒட்டி வளர்ந்து வந்தவன் நான். அண்ணா திமுகவில் உழைப்பவன் பிழைப்பான்.

இதற்கு நானே அடையாளம். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, எடப்பாடியார் பெயரை கூறியவர்கள் வாழ்ந்ததாகத்தான் வரலாறு இருக்கும். இப்போது மக்கள் தங்களது பிரச்சினைகளை அதிமுகவினர்களிடம் மட்டுமே கூறுகின்றனர். ஏனென்றால் நம்மிடம் சொன்னால் சரி செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கையை மக்கள் இன்றும் நம் மீது வைத்துள்ளனர்.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

Share198Tweet124
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.