• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
மக்களை வாட்டி வதைக்கும் கொடுங்கோல் அரசு தி.மு.க ஆட்சி

மக்களை வாட்டி வதைக்கும் கொடுங்கோல் அரசு தி.மு.க ஆட்சி

July 26, 2022
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026

ஹாங்காங்கை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

September 4, 2026
தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

September 4, 2026
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

September 4, 2026
21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு; சென்னையில் மாலை, இரவில் இடியுடன் மழை

September 3, 2026
தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்

September 3, 2026
தங்கம் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்வு

சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரனுக்கு ரூ.2,320 அதிகரிப்பு

September 3, 2026
முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் கேஸ் சிலிண்டர்

முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் கேஸ் சிலிண்டர்

September 3, 2026
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி

September 3, 2026
திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!

திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!

September 3, 2026
போதை பொருள் ஒழிப்பு ரூ.264.14 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம்!

September 3, 2026
செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்

செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்

September 3, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, September 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home மாவட்ட செய்திகள்>மதுரை

மக்களை வாட்டி வதைக்கும் கொடுங்கோல் அரசு தி.மு.க ஆட்சி

by Namadhu Amma
July 26, 2022
in மாவட்ட செய்திகள்>மதுரை
0
மக்களை வாட்டி வதைக்கும் கொடுங்கோல் அரசு தி.மு.க ஆட்சி
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கடும் தாக்கு

மதுரை,

மக்களை வாட்டி வதைக்கும் கொடுங்கோல் அரசு தி.மு.க. ஆட்சி என்று கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கூறி உள்ளார்.

சொத்து வரி, மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் விடியா தி.மு.க. அரசை கண்டித்து மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் கருப்பாயூரணியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளில் ஒரு சிறப்பான ஆட்சியை மக்களுக்கு அம்மா அரசு வழங்கியது. குறிப்பாக கடந்த நான்கரை ஆண்டு காலம் விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைத்தார் எடப்பாடியார். குறிப்பாக தமிழகத்தின் அனைத்து துறைகளையும் திறம்பட செய்து அதன் மூலம் வருவாயை நீட்டி மக்களை இந்த சிரமத்திற்கும் ஆட்படுத்தாமல் சிறப்பான மக்களாட்சியை எடப்பாடியார் நடத்தினார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தனர். அதில் வீட்டு வரியை உயர்த்த மாட்டோம், மாதம் ஒரு முறை மின்கட்டணத்தை நடைமுறைக்கு கொண்டு வருவோம் என்று கூறினார்கள். ஆனால் இன்றைக்கு ஆட்சிக்கு வந்த 14 மாதத்தில் தேர்தல் அறிக்கையில் சொன்ன எதையும் நிறைவேற்றாமல் தனக்கு வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் வகையில் சொத்து வரியை 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மக்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை தந்திடும் வகையில் 36 சதவீத மின் கட்டண உயர்வை தி.மு.க அரசு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் கொதிப்படைந்துள்ளனர்.

அது மட்டுமல்லாது ஆவின் விலை உயர்ந்துள்ளது. மேலும் கட்டுமான பொருட்கள் எல்லாம் 30 சதவீதம் விலை உயர்வு அதிகரிக்கிறது. இப்படி ஆட்சிக்கு வந்த 14 மாதங்களில் விலைவாசி உயர்வை தவிர வேறு எதையும் மக்களுக்கு திமுக அரசு வழங்கவில்லை.

இந்தியாவிலே தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக அம்மா ஆட்சியில் இருந்தது. தற்போது இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. அதேபோல் அதிகமான காவல்துறை மரணங்கள் அதிகரித்துள்ளது.

இதற்கெல்லாம் மேலாக நடைபெற்ற கள்ளக்குறிச்சி சம்பவம், நாள்தோறும் கொலை, கொள்ளை என்ற செய்தி தான் ஊடகங்களில் வருகிறது. காவல்துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர் அதை திறம்பட செய்யவில்லை. ஆட்சிக்கு வந்த 14 மாதங்களில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என மக்களை வாட்டி வதைக்கும் கொடுங்கோல் அரசாக திமுக அரசு உள்ளது.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

August 19, 2026
ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

August 19, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026

ஹாங்காங்கை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

September 4, 2026
தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

September 4, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.