வரும் செப்டம்பர் 17, 2026 அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா அதிவிமரிசையாக நடைபெற உள்ளது அதுசமயம் பக்தர்களின் வசதிக்காக 285 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முந்தைய நாளான செப்.16-ஆம் தேதி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து மதுரைக்கு 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், கோவை, திருப்பூா், ராமநாதபுரம், சிவகாசி, ராஜபாளையம், தேனி ஆகிய மாாவட்டங்களிலிருந்து மதுரைக்கு தலா 30 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மேலும், அருப்புக்கோட்டையிலிருந்து 25, விருதுநகரிலிருந்து 10, திண்டுக்கல்லிலிருந்து 20 பேருந்துகள் என மொத்தம் 285 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.





















