சென்னை,
எல்லா வளமும் பெற்று இறைவன் அருளுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
இன்று பிறந்தநாள் காணும் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் விஜயகாந்த்துக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். விஜயகாந்த் உடல் ஆரோக்கியத்துடன், எல்லா வளமும் பெற்று இறைவன் அருளுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
















