• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
மதுவிலக்கு கொள்கையில் தி.மு.க. இரட்டைவேடம் – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

ஊழியர்களின் கண்ணீர் ஆட்சியை கவிழ்க்கும் – கழக ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை

May 21, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, February 7, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்|மற்றவை

ஊழியர்களின் கண்ணீர் ஆட்சியை கவிழ்க்கும் – கழக ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை

by Namadhu Amma
May 21, 2022
in சிறப்பு செய்திகள்|மற்றவை
0
மதுவிலக்கு கொள்கையில் தி.மு.க. இரட்டைவேடம் – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை

10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் அனைத்து ஒப்பந்த மற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் ஏமாற்றிய தி.மு.க. ஆட்சியை ஊழியர்களின் கண்ணீர் கவிழ்க்கும் என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“சொன்னதை செய்வேன், செய்வதை தான் சொல்வேன்” என்பதை தமிழக மக்களுக்கு எனது உறுதிமொழியாக வழங்குகிறேன் என்று சொல்லி “புதிதாக இரண்டு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்ற வாக்குறுதியை அளித்த தி.மு.க., ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு ‘அம்மா உணவகங்களில் பணியாளர்களை குறைத்தல்’, ‘பணி நாட்களை குறைத்தல்’, ‘அம்மா மினி கிளினிக்குகளை மூடுதல்’ என்ற வரிசையில் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை ஒப்பந்த ஊழியர்களாக மாற்றி ‘உள்ளதும் போச்சு’ என்ற நிலைக்கு தமிழக மக்களை ஆளாக்கி இருக்கிறது.

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் வாரியத்தில் கிட்டத்தட்ட 2,000 தற்காலிக தொழிலாளர்கள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருவதாகவும், தற்காலிக பணியாளர்கள் என்றாலும் தங்களுக்கான சம்பளத்தை சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்திடம் இருந்துதான் இதுநாள் வரை பெற்று வந்ததாகவும், தற்போது மேற்படி பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்திற்கு தி.மு.க. அரசு தாரைவார்த்து விட்டதால், பத்து ஆண்டுகள், பதினைந்து ஆண்டுளாக பணிபுரிந்து வந்த தற்காலிக பணியாளர்களை ஒப்பந்த ஊழியர்களாக தி.மு.க. அரசு மாற்றியுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

இதனை எதிர்த்து சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் ஐந்தாவது நாளாக அறப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ‘உயிரே போனாலும் அறப் போராட்டம் தொடரும்’ என்று குடிநீர் வாரிய ஊழியர்கள் அறிவித்து இருக்கிறார்கள்.

இந்த அறப் போராட்டத்திற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது முழு ஆதரவினை அளிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு, வாரியத்தில் பணிபுரிந்து வந்த தற்காலிக ஊழியர்களை ஒப்பந்த ஊழியர்களாக மாற்றிய தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரியிடம் கேட்டதற்கு, வாரியத்தில் இக்கட்டான சூழ்நிலை நிலவுவதாகவும், பெரும்பாலான ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்து இருப்பதாக செய்திகள் வருகின்றன.

போராடும் ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், போராடும் ஊழியர்களுக்கு பதிலாக புதிய ஊழியர்களை வாரியம் நியமித்து வருவதாகவும், ஆனால் அவர்களுக்கு இயந்திரங்களை இயக்குவதற்கான திறனும், கழிவுநீர் அடைப்பை நீக்குவதற்கான அனுபவமும் இல்லை என்றும், சென்ற மாத ஊதியம் கூட அவர்களுக்கு அளிக்கப்படவில்லை என்றும் போராடும் ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

தி.மு.க. அரசின் தேர்தல் அறிக்கையில், “அறநிலையத் துறை, காகித ஆலைகள், கூட்டுறவு நூற்பாலைகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள், உள்ளாட்சித்துறையில் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் பராமரிப்பு பணியாளர்கள்,

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அரசு துறை மற்றும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் அனைத்து ஒப்பந்த மற்றும் தற்காலிக பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்” என்று வாக்குறுதியை அளித்து அதன்மூலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கட்டுப்பாட்டில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த தற்காலிக ஊழியர்களை ஒப்பந்த ஊழியர்களாக மாற்றுவது என்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும். இது மக்களை ஏமாற்றும் செயல்.

வாக்குறுதியை நிறைவேற்றாததோடு மட்டுமல்லாமல், அதற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது ஒரு ஆட்சிக்கு அழகல்ல. பணி நிரந்தரத்தை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த ஊழியர்களை தனியார் துறை ஊழியர்களாக மாற்றி இருக்கிறது தி.மு.க. அரசு. அரசே ஏமாற்றும் பணியில் ஈடுபடுவது கடும் கண்டனத்திற்குரியது. இதற்கு பெயர் ‘சொன்னதை செய்வேன்’ என்பதல்ல. ‘சொல்வது ஒன்று, செய்வது ஒன்று’ என்பதுதான் இதன் பொருள்.

இது தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கு ஓர் எடுத்துகாட்டு. இதுபோன்றவற்றை எல்லாம் ‘சாதனை’ என்று சொல்வது தான் ஒரு வேளை ‘திராவிட மாடல்’ போலும்! ‘திராவிட மாடல்’ ஆட்சி தேவை இல்லை என்ற நிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள்.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, தேர்தல் வாக்குறுதிப்படி, பத்து ஆண்டுகளுக்கு மேலாக சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும்,

தனியார் நிறுவன ஊழியர்களாக ஆக்கியதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்களுக்குரிய ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், சென்னை குடிநீர் வாரிய ஊழியர்களின் கண்ணீர் தி.மு.க. ஆட்சியை அழிக்கும் ஆயுதமாகிவிடும் என்பதை முதலமைச்சருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.