சென்னை
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்தி உள்ளார்.
கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா கோவில் அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சார்லஸ் (38)பிரித்திவிராஜ் (36 )தாவீது (30) ஈசாக் (19) பிரவீன்ராஜ் (19) கெர்மஸ் (18) ஆகிய ஆறு பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை தருகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்,இந்த விடியாஅரசு மணல்போக்கி குறித்து எந்த ஒரு எச்சரிக்கை பலகையும் வைக்காததை கண்டிப்பதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10லட்சம் நிவாரண நிதி வழங்க இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி ேக.பழனிசாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


















