• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
அன்னவாசல் அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் திடீர் ஆய்வு

அன்னவாசல் அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் திடீர் ஆய்வு

September 12, 2022
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

September 5, 2026
பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

September 5, 2026
நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 616-ஆக உயர்வு; நூற்றுக்கணக்கானோர் மாயம்

நேபாள வெள்ள பலி 1,344 ஆக உயர்வு

September 5, 2026
தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

September 5, 2026
சஸ்பெண்டை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்

சஸ்பெண்டை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்

September 5, 2026
மாணவர் சேர்க்கையில் ஜாதி, மத விவரங்கள் கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

மாணவர் சேர்க்கையில் ஜாதி, மத விவரங்கள் கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

September 5, 2026
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026

ஹாங்காங்கை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

September 4, 2026
தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

September 4, 2026
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

September 4, 2026
21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு; சென்னையில் மாலை, இரவில் இடியுடன் மழை

September 3, 2026
தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்

September 3, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, September 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்|மற்றவை

அன்னவாசல் அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் திடீர் ஆய்வு

by Namadhu Amma
September 12, 2022
in தற்போதைய செய்திகள்|மற்றவை
0
அன்னவாசல் அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் திடீர் ஆய்வு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

புதுக்கோட்டை,
அவசர சிகிச்சைக்கு வந்தவரை டாக்டர் புறக்கணித்ததாக வந்த புகாரின் பேரில் அன்னவாசல் அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு தினமும், 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். அன்னவாசல் சுற்று வட்டார பகுதியில் அதிக அளவில் கிராமங்கள் உள்ளதால், கிராம பகுதியில் உள்ள வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள், பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறவும், அவசர சிகிச்சைக்காகவும் அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.

இந்த மருத்துவமனைக்கு வரும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் மணி கணக்கில் காத்திருத்து சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. மேலும் இரவு நேரங்களில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அவசர சிகிச்சைக்கு வந்தால் முதலுதவி சிகிச்சை அளிக்க கூட போதிய மருத்துவர்கள் இல்லாததால் மிகவும் சிரமம் அடைகின்றனர். இந்த மருத்துவமனையில் எக்ஸ்ரே கருவிகள் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை-மணப்பாறை நெடுஞ்சாலையில் இந்த மருத்துவமனை உள்ளதால், தினமும் விபத்தில் சிக்கி படுகாயத்துடன் வருவோர் முதலுதவி சிகிச்சை கூட பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

சாலை விபத்துகள், விஷக்கடி உள்ளிட்ட அவசர சிகிச்சைக்கு அன்னவாசல் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற வேண்டியவர்கள் தற்போது டாக்டர்கள் பற்றாக்குறையால் சிகிச்சை பெற முடியாமல் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

சில நேரங்களில் அங்கு செல்வதற்குள் உயிர் பிரியும் நிலைமையும் ஏற்படுகிறது. சில நேரங்களில் அன்னவாசல் மருத்துவமனை ஆம்புலன்ஸ் கூட செயல்படாமல் அடிக்கடி பழுதாகி நிற்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவசர சிகிச்சைக்கு சென்ற நோயாளியை இரவு பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அன்னவாசல் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த தகவலை அறிந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அன்னவாசல் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியரிடம் மருத்துவமனை செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் உயர் அதிகாரிகளை அழைத்து போதிய மருத்துவர்கள், ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றும் மருத்துவமனைக்கு தேவையான உதவிகளையும் நிறைவேற்றி தர வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

ஆய்விற்கு முன்னதாக மருத்துவனை பணியில் இருந்த ஒரே மருத்துவர் ஓய்வறையில் இருந்ததும் நோயாளிகள் காத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. கழக ஆட்சி காலத்தில் அன்னவாசல் மருத்துவமனைக்கு தனி ஆம்புலன்ஸ், எக்ஸ்ரே கருவிகள், மருத்துவ உபகரணங்கள், கூடுதல் மருத்துவர் ஊழியர்கள், புதிய கட்டிடங்கள் என பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

August 19, 2026
ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

August 19, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

September 5, 2026
பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

September 5, 2026
நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 616-ஆக உயர்வு; நூற்றுக்கணக்கானோர் மாயம்

நேபாள வெள்ள பலி 1,344 ஆக உயர்வு

September 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.