ஜப்பானில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்
🏸 பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் SH6 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீராங்கனை நித்ய ஸ்ரீ அவர்களுக்கும்,
🏸 பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் SL3-SU5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீராங்கனை மனிஷா ராமதாஸ் அவர்களுக்கும்,
🏸 பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் சிவராஜன் சோலைமலை அவர்களுக்கும்,
🏋️ பெண்களுக்கான வலுதூக்குதல் 67 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி அவர்களுக்கும்,
எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்களது அயராத உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வால் சர்வதேச அரங்கில் சாதனை படைத்து, இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள தங்களின் வெற்றி, விளையாட்டுத் துறையில் சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
வரும் காலங்களிலும் மேலும் பல சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று, தொடர் வெற்றிகளையும் பதக்கங்களையும் குவித்து, தாய்நாட்டிற்கும் தாய்த்தமிழ்நாட்டிற்கும் மென்மேலும் பெருமை சேர்த்திட எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.





















