தமிழ்நாடு காவல்துறையில் ஐ.ஜி. அந்தஸ்தில் பணியாற்றி வந்த மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாநில உள்துறைச் செயலாளர் கார்த்திக் பிறப்பித்துள்ளார்.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் விவரம்:
1. சந்தோஷ்குமார் ஐபிஎஸ்: சென்னையில் பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐ.ஜி.யாகப் பணியாற்றி வந்த இவர், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு (Civil Supplies CID) ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. ரூபேஷ்குமார் மீனா ஐபிஎஸ்: குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஐ.ஜி.யாக இருந்த இவர், திருச்சி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. காமினி ஐபிஎஸ்: திருச்சி மாநகர காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த இவர், சென்னையில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அலுவலகத்தின் நிர்வாகப் பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.




















