தமிழ்நாட்டில் 2026–2027 கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று வெளியிட்டார்.
அதன்படி, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2027 மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 8 முதல் 18ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை
| தேதி | பாடம் |
|---|---|
| மார்ச் 3 | தமிழ் மற்றும் பிற மொழிப்பாடங்கள் |
| மார்ச் 8 | ஆங்கிலம் |
| மார்ச் 12 | வேதியியல், கணக்குப் பதிவியல் |
| மார்ச் 15 | கணினி அறிவியல் |
| மார்ச் 19 | உயிரியல், வரலாறு |
| மார்ச் 23 | இயற்பியல், பொருளியல் |
| மார்ச் 29 | கணிதம், வணிகவியல் |
மேலும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 17ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிளஸ் 1 அரியர் தேர்வுகள் மார்ச் 5ஆம் தேதி தொடங்குகின்றன.
தேர்வு முடிவுகள்: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 7ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதியும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர்கள் தேர்வுகளுக்குத் தயாராக ஏதுவாக முன்கூட்டியே அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.





















