2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் கட்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட விரும்புவதாகத் தெரிவித்து, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராகப் பணியாற்றிய எல்.முருகன், பின்னர் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐந்து பக்கக் கடிதம் எழுதி தனது ராஜினாமா முடிவைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
2029ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் அமைப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட விரும்புவதாகவும், அதற்காக அமைச்சர் பொறுப்பிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.





















