தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
கேரள மாநில ஆளுநராகப் பணியாற்றி வந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கடந்த மார்ச் 12ஆம் தேதி முதல் தமிழக ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனித்து வந்தார். இந்நிலையில், அவரை தமிழகத்தின் முழுநேர ஆளுநராக நியமித்து அக்டோபர் 12ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், சிக்கிம் மாநில ஆளுநராக இருந்த ஓம் பிரகாஷ் மாத்தூர் கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக ஆளுநராக சுதா யாதவ், ஒடிசா ஆளுநராக பிரஜ் மோகன் ராம், உத்தரகாண்ட் ஆளுநராக தால் சிங் பிசென், சிக்கிம் ஆளுநராக துஷ்யந்த் கௌதம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய ஆளுநர்கள் தங்களது பொறுப்புகளை ஏற்கும் நாளிலிருந்து இந்த நியமனங்கள் நடைமுறைக்கு வரும் என குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.
இதனிடையே, தமிழகத்தின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அர்லேகருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் வளர்ச்சி, மாநில உரிமைகள் மற்றும் மக்கள் நலனைப் பாதுகாக்கும் வகையில் அவரது பணிகள் அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





















