திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை பகுதியில் கடல் நீர் சுமார் 100 அடி தூரம் உள்வாங்கி காணப்படுகிறது….
திருச்செந்தூரில் அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும் அவற்றை ஒட்டிய நாட்களிலும் கடல் நீர் உள்வாங்குவதும், பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்புவதும் வழக்கமாக உள்ளது.
தமிழகத்தின் புகழ்பெற்ற முருகன் திருத்தலங்களில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிவிட்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில், கடல் நீர் வழக்கத்தைவிட அதிக தூரம் உள்வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் கடற்கரையில் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணற்பரப்புகள் வெளியே தெரிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, பக்தர்கள் கடலில் பாதுகாப்பாக நீராடுமாறு கோயில் நிர்வாகமும் காவல்துறையும் அறிவுறுத்தியிருந்தன.





















