மஹாளய அமாவாசையை முன்னிட்டு, மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.
முன்னோர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு நன்றி செலுத்தும் முக்கிய நாளாக மஹாளய அமாவாசை இந்துக்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைகள், ஆற்றங்கரைகள் மற்றும் புனித நீர்நிலைகளில் பொதுமக்கள் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபடும் வழக்கம் உள்ளது.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், திருச்சி ஸ்ரீரங்கம் காவிரிக்கரை உள்ளிட்ட புனிதத் தலங்களில் முன்னோர்களுக்கு எள், தண்ணீர் மற்றும் தர்ப்பைப் புல் கொண்டு தர்ப்பணம் செய்யப்படுகிறது.
மஹாளய அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதால் பித்ருக்களின் ஆசி கிடைத்து, குடும்பத்தில் நன்மைகள் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.





















