சென்னை திருவொற்றியூர் பகுதியில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பீகாரைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவொற்றியூர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் 5 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர் சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியில் வசித்து வந்த பீகாரைச் சேர்ந்த ராகுல் என்பவர் மீது சந்தேகம் எழுந்தது. அவரை கைது செய்த போலீசார், போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





















