தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை (அக்.6) வெளியாக உள்ளது. டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையின்படி, குரூப்-4 எழுத்துத் தேர்வு டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், பில் கலெக்டர், வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்பட உள்ளன. பெரும்பாலான பதவிகளுக்கு அடிப்படை கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.
இந்த முறை சுமார் 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், சரியான காலிப்பணியிட எண்ணிக்கை நாளை வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில்தான் உறுதியாகத் தெரியவரும். கடந்த குரூப்-4 தேர்வுக்கு 13.89 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், இம்முறை சுமார் 15 லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.





















