ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளம் ஆண்கள் 4×400 மீ தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று தாய்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள இந்திய அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எக்ஸ் தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்
ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளம் ஆண்கள் 4×400 மீ தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று தாய்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள இந்திய அணிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய அணியில் இடம்பெற்று சிறப்பான பங்களிப்பை வழங்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் விஷால் மற்றும் ராஜேஷ் ஆகியோருக்கு எனது சிறப்பு பாராட்டுகள்.
கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் இந்தச் சாதனையைப் படைத்துள்ள வீரர்கள், வரும் காலங்களிலும் மேலும் பல வெற்றிகளைப் பெற்று, பதக்கங்களைக் குவித்து இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க மனமார வாழ்த்துகிறேன்.
இவ்வாறு எக்ஸ் தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்





















