4000 மாணவர்களின் ஆரவாரத்தில் ‘துரோகம் பழகு’ 3rd Look, டீசர் வெளியீடு!
கோவை: மகிழ் Productions சார்பில் பியூலா மகிழ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘துரோகம் பழகு’. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து, 2-வது பார்வையை (Second Look) புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிலையில், ‘துரோகம் பழகு’ படத்தின் 3-வது பார்வை (3rd Look) மற்றும் டீசர் வெளியீட்டு விழா கோவை ரத்தினம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாணவர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் படத்தின் 3rd Look போஸ்டர் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் நடிகர் தக்க்ஷன் விஜய், நடிகை வாழை ஜானகி அம்மா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினர். அப்போது படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர்.
விழாவில் திரையிடப்பட்ட ‘துரோகம் பழகு’ டீசர், மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. டீசரை மீண்டும் ஒருமுறை திரையிடுமாறு மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து டீசர் மீண்டும் திரையிடப்பட்டது. இதனால் கல்லூரி அரங்கமே உற்சாகக் கொண்டாட்டமாக மாறியது.
மாணவர்களின் பேராதரவு படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதுடன், ‘துரோகம் பழகு’ படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வர இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.





















