பி.டி.உஷாவின் 42 ஆண்டு சாதனையை முறியடித்த தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எக்ஸ் தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்
ஜப்பானின் ஐச்சி–நகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 54.75 வினாடிகளில் இலக்கை எட்டி, புதிய தேசிய சாதனையுடன் வெண்கலப் பதக்கம் வென்று தாய்நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பி.டி. உஷா பதிவு செய்த 55.42 வினாடிகள் என்ற தேசிய சாதனையை, 42 ஆண்டுகளுக்குப் பிறகு 54.75 வினாடிகளில் கடந்து வித்யா ராம்ராஜ் புதிய தேசிய சாதனையைப் படைத்துள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியிலேயே வித்யா 55.42 வினாடிகளில் ஓடி பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்திருந்தார்.
தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் வரலாற்றுச் சாதனை படைத்துள்ள வித்யா ராம்ராஜ் அவர்கள், வருங்காலப் போட்டிகளிலும் மேலும் பல சாதனைகளைப் படைத்து, இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு எக்ஸ் தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்





















