பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் வழங்கப்பட்ட 1,498 நினைவுப் பரிசுகள் மற்றும் கலைப்பொருட்கள் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டுள்ளன. மத்திய கலாசார அமைச்சகம் நடத்தும் 8-வது மின்-ஏலம் அக்டோபர் 2 வரை நடைபெறுகிறது.
இந்த ஏலத்தில் பாரம்பரிய கைவினைப் பொருட்கள், ஓவியங்கள், சிற்பங்கள், மத மற்றும் கலாசார நினைவுச் சின்னங்கள், விளையாட்டு தொடர்பான நினைவுப் பொருட்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை ‘நமாமி கங்கே’ திட்டத்திற்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.





















