சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக பூவிருந்தவல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரையிலான மஞ்சள் வழித்தடத்தில் பயணக் கட்டணம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த வழித்தடத்தில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10; அதிகபட்ச கட்டணம் ரூ.40 என செய்திகள் தெரிவிக்கின்றன.
பூவிருந்தவல்லி புறவழிச்சாலையிலிருந்து பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் வரை ரூ.10, காட்டுப்பாக்கம் வரையிலான சில நிலையங்களுக்கு ரூ.20, போரூர் சந்திப்பு உள்ளிட்ட நிலையங்களுக்கு ரூ.30, இறுதியாக வடபழனி வரை ரூ.40 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





















