ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் அபய் சிங் அவர்களுக்கு வாழ்த்துகளை தமது எக்ஸ் தளப்பதிவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தாய்நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள தமிழக வீரர் அபய் சிங் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனது திறமையாலும், கடின உழைப்பாலும் சர்வதேச அரங்கில் சாதனை படைத்துள்ள அபய் சிங் அவர்கள், வருங்கால போட்டிகளில் மேலும் பல வெற்றிகளையும் பதக்கங்களையும் வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் தொடர்ந்து பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.





















