முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை குறிப்பிட்டு, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தைவிட தரமான பால்தான் தற்போதைய முக்கியத் தேவை என்று அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.
“குழந்தைகளுக்கு தேவை பால்; தங்க மோதிரம் வழங்கும் நிலையில், தரமான பாலுக்கான தட்டுப்பாட்டை எப்போது சரிசெய்யப் போகிறீர்கள்?” என்று முதலமைச்சரிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், சென்னை மக்களின் தினசரி பால் தேவை 30 லட்சம் லிட்டர் என்றும், ஆவின் 14.5 லட்சம் லிட்டர் மட்டுமே விநியோகிப்பதாகவும் தமிழிசை தனது பதிவில் கூறியுள்ளார். ஆவின் பால் கிடைக்காததால் மக்கள் அதிக விலை கொடுத்து தனியார் பாலை வாங்க வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.





















