ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவர் அணிப் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் பேட்மிண்டன் அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சர்வதேச அரங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்புடன் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்திய அணியின் வெற்றிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த தமிழக வீரர் ஹரிஹரனுக்கு தனிப்பட்ட பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ள எஸ்.பி. வேலுமணி, இந்தச் சாதனை மேலும் பல வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகளுக்கு வழிவகுக்கட்டும் என்றும் வாழ்த்தியுள்ளார்.





















