‘காக்க காக்க’, ‘நான் அவனில்லை’ உள்ளிட்ட படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் ஜீவன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைத்துறைக்கு திரும்பியுள்ளார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தில் ஜீவன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். அறிமுக இயக்குநர் அசோக் குமார் இயக்கும் இப்படத்தில் அர்ஜித் சங்கர் மற்றும் க்ரித்தி ஷெட்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

‘காக்க காக்க’ படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக அறிமுகமான ஜீவன், தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து ஹீரோவாகவும் ரசிகர்களிடம் தனி இடத்தைப் பிடித்தார். தற்போது புதிய தலைமுறை நடிகர்களுடன் அவர் இணைந்திருப்பது ‘லவ்வர் பாய்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
படப்பிடிப்பில் ஜீவன் இணைந்துள்ளதை அறிவிக்கும் வகையில், அவரது ஸ்டைலிஷான தோற்றம் இடம்பெற்ற சிறப்பு புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில், ஜீவன் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
சுதன் சுந்தரம் தயாரிக்கும் இப்படத்தின் அடுத்தகட்ட தகவல்களை படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது.





















