கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அரசு மதுபான நிறுவனமான BEVCO ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.05 லட்சம் போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.2,500 அதிகமாகும்.
இதன் ஒரு பகுதியாக, ஊழியர்களுக்கு ஓணம் முன்பணமாக ரூ.50,000 வழங்கப்பட உள்ளது. இந்தத் தொகை பின்னர் 7 தவணைகளாக சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்காலிக பணியாளர்களுக்கு ரூ.6,250 முதல் ரூ.6,750 வரையிலும், தலைமையகம் மற்றும் கிடங்குகளில் பணியாற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு ரூ.13,000 வரையிலும் போனஸ் அல்லது ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள அரசு மதுபான நிறுவன ஊழியர்களுக்கு அறிவித்துள்ள இந்த போனஸ், மாநில பொதுத்துறை நிறுவனங்களில் வழங்கப்படும் அதிகபட்ச போனஸ்களில் ஒன்றாக அமைந்துள்ளது.





















