சென்னை,
கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டியை அடுத்துள்ள அழகுசிறையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் அங்கு பணியாற்றி வந்த 5பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்வதுடன், காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் பூரணநலம் பெற்று வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்.
பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் செயல்படுகின்றனவா என்பதை உறுதிபடுத்தவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்கவும் இவ்வரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


















