சென்னை,
இதுகுறித்து தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 115-வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று காலை சென்னை, நந்தனம், அண்ணா சாலையில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் திருஉருவ சிலைக்கு, கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி மாலை அணிவித்தும், திருஉருவ சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவ படத்திற்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை கழக செயலாளர்களான, டாக்டர் அ.தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ, சி.பொன்னையன், முனைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ, டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ, எஸ்.கோகுலஇந்திரா, அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ, பா.பென்ஜமின், எஸ்.டி.கே.ஜக்கையன், நா. பாலகங்கா, முனைவர் வைகைச்செல்வன், ஆர்.கமலக்கண்ணன், ஆதிராஜாராம், திருத்தணி கோ.அரி, வாலாஜாபாத் பா.கணேசன், கா.சங்கரதாஸ், முன்னாள் அமைச்சர்களான வி.சோமசுந்தரம், மாதவரம் வி.மூர்த்தி, பி.வி.ரமணா, டாக்டர் வி.சரோஜா, டி.கே.எம்.சின்னையா,
மாஃபா.பாண்டியராஜன், எஸ்.அப்துல்ரகீம், மாவட்ட கழக செயலாளர்களான விருகை வி.என்.ரவி, ஆர்.எஸ்.ராஜேஷ், டி.ஜி.வெங்கடேஷ்பாபு, தி.நகர் பி.சத்தியா, எம்.கே.அசோக், கே.பி.கந்தன், திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், சிட்லபாக்கம் ச.ராசேந்திரன், சிறுணியம் பி.பலராமன், வி.அலெக்சாண்டர், மரகதம் குமரவேல் எம்.எல்.ஏ,
கழக செய்தி தொடர்பாளர்களான ஆர்.எம்.பாபுமுருகவேல், எம்.கோவை சத்யன், அ.சசிரேகா உட்பட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாக வருகை தந்து தேவர் திருமகனாருக்கு மரியாதை செலுத்தினார்கள்.
மேலும், தேவர் திருமகனாரின் 115-வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு, தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர் எம்.கே.அசோக் ஏற்பாட்டில், வேளச்சேரியில் இருந்து 300 பேர்கள் தொடர் ஓட்டமாக ஜோதி ஏந்தி வந்து, சென்னை, நந்தனம், அண்ணாசாலையில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனார் திருஉருவச்சிலை வளாகத்தில், கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமியிடம் ஜோதியை வழங்கினர்.
அதைத்தொடர்ந்து, 5,000 பேர்களுக்கான அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை, கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஒப்புதலோடு இந்த செய்தி வெளியிடப்படுகிறது. இவ்வாறு தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


















