• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
40 தொகுதிகளையும் கழகம் வென்றெடுக்கும்- கே.ஏ.செங்கோட்டையன் திட்டவட்டம்

40 தொகுதிகளையும் கழகம் வென்றெடுக்கும்- கே.ஏ.செங்கோட்டையன் திட்டவட்டம்

September 22, 2022
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

October 5, 2026
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

October 5, 2026
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, October 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

40 தொகுதிகளையும் கழகம் வென்றெடுக்கும்- கே.ஏ.செங்கோட்டையன் திட்டவட்டம்

by Namadhu Amma
September 22, 2022
in தற்போதைய செய்திகள்
0
40 தொகுதிகளையும் கழகம் வென்றெடுக்கும்- கே.ஏ.செங்கோட்டையன் திட்டவட்டம்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவண்ணாமலை

எடப்பாடியார் தலைமையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சாதனை படைப்போம். 40 தொகுதிகளையும் கழகம் வென்றெடுக்கும் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

போளூர் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் போளூர் பேருந்து நிலையம் அண்ணாபூங்கா அருகில் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணை செயலாளரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

போளுர் நகர செயலாளர் ஜி.பாண்டுரங்கன், சேத்பட் நகர செயலாளர் எம்.ஜி.ராதாகிருஷ்ணன் களம்பூர் நகர செயலாளர் பஞ்சாட்சரம் ஆகியோர் வரவேற்றனர்

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளரும்,
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ பேசியதாவது:-

இங்கு கூடியுள்ள கூட்டத்தை பார்த்தால் நாளையே தேர்தல் நடந்தாலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும் என திமுகவினைரை அச்சுறுத்தும் வகையில் தொண்டர்கள் கூடி உள்ளனர். போளூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்டமே வருகை தந்துள்ளது.

இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கழகம் சிறப்பான வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தங்குதடையின்றி அதிமுகவை வழிநடத்தி வரும் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளையும் கழகம் வென்றெடுக்கும்.

அறிஞர் அண்ணா தனது பேச்சாற்றலால் பாமரனும் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியும் என்பதை நிரூபித்து காட்டினார். அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் உயிர்மூச்சு இருக்கும் வரையில் தமிழக நிரந்தர முதல்வராக இருந்து வரலாறு படைத்தார். எந்த பணியை கொடுத்தாலும் அதை திறம்பட செய்யக்கூடிய ஆற்றல் படைத்தவர் தான் அக்ரி கிருஷ்ணமூர்த்தி.

மனிதநேயமிக்கவராகவும் மக்களையும், தொண்டர்களையும் நேசிப்பவராகவும் உள்ள காரணத்தால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எந்த சட்டமன்ற தொகுதியில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி போட்டியிட்டாலும் எளிதில் வெற்றிபெறுவார். அவரை யாராலும் வெல்லமுடியாது. தொண்டர்கள் மற்றும் மக்களின் பேராதரவு எப்போதும் அதிமுகவிற்கும், அக்ரி எஸ்.எஸ் கிருஷ்ணமூர்த்திக்கும் உண்டு.

48 லட்சம் மாணவர்கள் பசியாறும் சத்துணவு திட்டத்தை 1980-ம் ஆண்டில் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். உலக தலைவர்கள் அனைவராலும் அம்மா என்று அழைக்கப்பட்ட ஒரே தலைவர் புரட்சித்தலைவி. இந்திய தலைவர்களுக்கு இல்லாத ஆற்றல் புரட்சித்தலைவியிடம் இருந்தது.

ஆறு மொழிகளில் புலமை பெற்றவர். பாரதி கண்ட கனவை நிறைவேற்றியவர். அன்னை தெரசாவால் பாராட்டு பெற்றவர். தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக அரசு முடக்கியுள்ளது. மக்களை உணராத திமுக அரசால் கட்டிட கட்டுமான பொருட்கள் முதல் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

வல்லரசு நாடுகளே கொடுக்க முடியாத மடிக்கணினிகளை, மாணவ-மாணவிகளுக்கு தந்து, அவர்களின் மேற்படிப்பு வளர்ச்சிக்காக மடிக்கணினி திட்டத்தை செயல்படுத்தி காட்டியது அம்மாவின் அரசு. ஏழை எளிய மாணவர்களும் மருத்துவ படிப்பை பெற 7.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியவர் எடப்பாடி கே.பழனிசாமி.

அதிமுக தலைமை என்றால் அது எடப்பாடி கே.பழனிசாமி தான். அடுத்த தமிழக முதல்வரும் அவர் தான். தமிழ் மண்ணில் அண்ணா திமுக என்ற இயக்கத்தை எவராலும் சாய்த்து விட முடியாது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.