சேலம்
நீதிமன்றம் செல்பவர்களுக்கு இந்த கட்சியில் எப்படி இடம் கிடைக்கும் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார்.
கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி : அண்மையில் கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர்கள் ஏதோ ஒரு சூழ்நிலையில் மன்னிப்பு கோரினால் ஒன்றாக சேருவதற்கு வாய்ப்பு உள்ளதா.
பதில் : யாரை குறிப்பிடுகிறீர்கள் என்று சொன்னால் எனக்கு தெரியும். யார் யாரை சேர்ப்பது, விலக்கி வைப்பது என்பதை தலைமைக்கழகம் தான் முடிவு செய்யும்.
கேள்வி : பொதுக்குழுவிலிருந்து விலக்கி வைக்கப்பட்ட நபர்கள்,
பதில் : தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது. நீதிமன்றம் செல்பவர்களுக்கு இந்த கட்சியில் எப்படி இடம் கிடைக்கும்.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார்.


















