சேலம்,
பொதுச்செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி : அதிமுக உட்கட்சி தேர்தல் தொடர்பாக உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது.
பதில் : நீங்களே சாதகமான தீர்ப்பு என்று சொல்லி விட்டீர்களே. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மை, தர்மம் வென்றுள்ளது.
கேள்வி : உச்சநீதிமன்றத்திலும் சாவி தொடர்பான மனு தள்ளுபடி ஆகியுள்ளதே.
பதில் : உண்மை, தர்மம் வென்றுள்ளது. உண்மை எங்களிடம் உள்ளது. தர்மம் எங்களிடம் உள்ளது. நீதி எங்களிடம் உள்ளது. இதனால் நீதிமன்றத்தின் மூலம் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது.
கேள்வி : பொதுச்செயலாளர் தேர்வுக்கான தேர்தல் நடக்குமா
பதில்: நடக்கும் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளேன். இடைக்கால பொதுச்செயலாளராக கழக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும்.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.


















