சென்னை
பி.கே.மூக்கையாத்தேவர் புகழை போற்றி வணங்குகிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
பொதுவாழ்வில் நேர்மையை கடைப்பிடித்து, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்த மாசற்ற தலைவராகவும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராகவும் திறம்பட மக்கள் பணியும், கல்விச்சேவையும் ஆற்றிய உறங்காப்புலி
பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவு நாளில் அவரின் பெரும்புகழை போற்றி வணங்குகிறேன்.
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
















