ஈரோடு,
பவானியில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கழகத்தினர் திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் மக்கள் விரோத தி.மு.க. அரசுக்கு எதிரான கண்டன குரல் கோட்டையில் எதிரொலிக்கும் என்றும் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் பேசினார்
விடியா தி.மு.க அரசை கண்டித்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பாக பெருந்துறை தொகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கழகசட்டமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கழக அம்மா பேரவை இணை செயலாளர் எஸ்.ஜெயக்குமார் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். பெருந்துறை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அருள் ஜோதி கே.செல்வராஜ் வரவேற்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் பேசியதாவது:-
கழக நிறுவனத்தலைவர் புரட்சித்தலைவர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழியில் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சியை சிறப்பாக நடத்தினார். கழகத்தையும் சிறப்பாக வழி நடத்துவார்.
தி.மு.க. ஆட்சியில் விண்ை முட்டும் விலைவாசியால் மக்கள் வேதனையடைந்துள்ளனர். மின்வெட்டுடன் மின் கட்டணமும் உயர்ந்துள்ளது. சொத்து வரி, வீட்டு வரி உயர்ந்துள்ளது. அம்மா அரசின் நலத்திட்டங்களை நிறுத்துகிறது திமுக அரசு.
தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பவானியில் இன்று நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழகத்தினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும். மக்கள் விரோத தி.மு.க.வுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தின் குரல் கோட்டையில் எதிரொலிக்க வேண்டும்.
இவ்வாறு ஈரோடு புறநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் பேசினார்.
இக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.சி.பொன்னுதுரை, கே.எஸ்.பழனிசாமி, டாக்டர் பொன்னுசாமி, ஒன்றிய செயலாளர்கள் டி.வி.ரஞ்சித்ராஜ், சி.டி.ரவிச்சந்திரன், கே.கே.சக்திவேல் தனசேகர், சி.பி.ராமசாமி, மாவட்ட நிர்வாகிகள் மைனாவதி கந்தசாமி, கே.பி.எஸ்.மணி, பேரூராட்சி செயலாளர்கள் கல்யாணசுந்தரம், மே.எம்.பழனிசாமி, பூபாலகிருஷ்ணன், துரைசாமி, வி.கே.சின்னசாமி, கமலக்கண்ணன், சார்பு அமைப்பு செயலாளர்கள் கே.ஆர்.ஜான், அப்புகுட்டி, மார்ட்டின் ராஜ், உமா, தங்கவேல், பொதுக்குழு உறுப்பினர் கண்ணம்மாள், ராமசாமி, திங்களூர் கந்தசாமி, பொன்முடி சந்திரசேகர், ஒன்றியக்குழு தலைவர் சாந்தி ஜெயராஜ், துடுப்பதி அன்பரசு, குருசாமி, பெருந்துறை சங்கர், பெட்டிசன் மணி, கவுன்சிலர் குணசேகரன், ஆறுமுகம், ரொட்டி பழனிசாமி, மண்டபம் ரவி, தர்மராஜ், சீனிவாசன், டைலர் ரவி, எம்.எம்.சோமு, கார்த்தி, பாலு, ரவி, போட்டோ மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கழக பொதுக்குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் எஸ்.எம்.தங்கவேலு, ஜெகதீசன், முனியப்பன், மேகநாதன், நகர எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் எம்.ஜி.நாத் (எ) மானதயன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஏ.பிரகாஷ், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.ஜான், பூங்கோதை வரதராஜன், எம்.எஸ்.வாசு, கே.சி.கணேசன், கே.கே.விஸ்வநாதன், விவேகானந்தன், ஜீகுனு பாலு, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கராத்தே பெரியசாமி, பிரபாகரன், ஆண்டியப்பன், ஈஸ்வரமூர்த்தி, மாதேஸ்வரன், திருநாவுக்கரசு, சோமு, எஸ்.எஸ்.மாரியப்பன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயன் நன்றி கூறினார்.
முன்னதாக பவானி நகர கழக அலுவலகத்தில் பவானி நகர கழக செயலாளர் எம்.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற பவானி தொகுதி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் ரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. பேசுகையில், பவானி நகரமே குலுங்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் கழகத்தினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.











