• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

நெல் கொள்முதலுக்கு ஆன்லைன் பதிவை கட்டாயமாக்கக் கூடாது – அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தல்

January 28, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Sunday, February 8, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

நெல் கொள்முதலுக்கு ஆன்லைன் பதிவை கட்டாயமாக்கக் கூடாது – அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தல்

by Namadhu Amma
January 28, 2022
in சிறப்பு செய்திகள்
0
விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சட்டமன்றத்திலும், அறிக்கைகளின் மூலமாகவும், பேட்டிகளின் வாயிலாகவும் தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விளைச்சலுக்கு ஏற்றவாறு அதிக அளவில் திறக்கப்படவில்லை என்று நான் இந்த அரசுக்கு ஏற்கெனவே சுட்டி காட்டினேன்.

மேலும், கொள்முதல் நிலையங்களில் ஆளும் கட்சியினர் தலையீடு, குறைந்த அளவு நெல் கொள்முதல், மழையால் விவசாயிகளின் நெல்மணிகள் மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் நனைந்து நஷ்டம் ஏற்படுவது போன்றவற்றையும் சுட்டி காட்டி, இக்குறைகளை உடனடியாக களைய வேண்டும் என்று இந்த விடியா அரசை பலமுறை வலியுறுத்தினேன்.

மேலும், கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவ மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மத்திய அரசின் நிதியை காரணம் காட்டி இந்த அரசு இழப்பீடே வழங்காமல் இருந்ததை நான் பொது வெளியில் சுட்டி காட்டிய பிறகுதான்,
இந்த விடியா அரசு கடந்த சில நாட்களாக பயிர் இழப்பீடுகளை வழங்கி வருகிறது.

மேலும், டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை இறுதியில் பெய்த கனமழையில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 7 லட்சம் ஏக்கர் நெற்கதிர்கள் மழை வெள்ளத்தால் மூழ்கி வீணானது.

பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டுமென்று அரசை நான் வலியுறுத்தினேன். ஆனால், இந்த விடியா அரசு பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்றுவரை ஆய்வு செய்யவில்லை. ஆகவே, உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும்.

2022 புத்தாண்டு பிறந்தது, தை திங்களும் பிறந்தது. வியர்வை சிந்தி பாடுபட்ட விவசாயிகள் நெல்மணிகளை அறுவடை செய்து, தங்களது உழைப்பிற்கான பலனை பெறவேண்டிய இந்த நேரத்தில், இந்த அரசு ஆன்லைனில் பதிவு செய்யும் விவசாயிகளிடம் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என்று உத்தரவிட்டுள்ளது விவசாயிகளை பெருத்த கவலைக்கு உள்ளாக்கி உள்ளது.

இதன்படி கணினி கேட்கும் விவரங்களை விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும். பிறகு அப்பதிவுகள் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அவர்கள் இருவரும் ஒப்புதல் அளித்த பிறகுதான் நெல் கொள்முதல் செய்வதற்கான தேதி விவசாயிக்கு தெரிவிக்கப்படும்.

பெரும்பான்மையான அப்பாவி விவசாயிகளுக்கு ஆன்லைனில் பதிவு செய்வது என்றால் என்னவென்று தெரியாது. இவர்களுக்கு மற்றவர்களது உதவி தேவை. மேலும், வருவாய்த்துறை அலுவலர்களின் ஒப்புதல் தேவை. இதுபோன்ற தாமதங்களினால் தாங்கள் பாடுபட்டு விளைவித்த நெல்மணிகளை சரியான நேரத்தில் அறுவடை செய்ய முடியாமல் பாழாகி, தங்கள் வாழ்வாதாரம் பறிபோய் விடுமோ என்று அஞ்சுகிறார்கள்.

இதுபோன்ற அரசின் நடவடிக்கைகளால், இடைத்தரகர்களிடம் தங்களது உழைப்பில் கிடைக்க பெற்ற நெல் மூட்டைகளை குறைந்த விலைக்கு விற்று, சிக்கி சீரழிந்து விடுவோமோ என்ற பீதியில் உறைந்து போய் உள்ளனர். ஆளும் தி.மு.க.வின் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளே இந்த அறிவிப்பை எதிர்த்து டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நெல் கொள்முதல் நிலையம் தேதி அறிவிக்கும் வரை, நெற்கதிர்களை அறுவடை செய்யாமல் நிலத்திலேயே விட்டு வைக்க முடியாது. ஏனெனில் நெற்கதிர்கள் முற்றிய பின், அறுவடை செய்வதற்கு ஓரிரு நாள் தாமதம் செய்தாலே பெருமளவு பாதிப்பினை ஏற்படுத்தும். எனவே விவசாயிகள், கொள்முதல் நிலையம் தேதி அறிவிக்கும் வரை காத்திருக்காமல், நெல்லை குறித்த காலத்தில் அறுவடை செய்ய வேண்டும்.

பின்பு கொள்முதல் நிலையம் அறிவிக்கும் நாள்வரை அறுவடை செய்த நெல்லை தங்களது பொறுப்பில் தான் வைத்திருக்க வேண்டும். மழை பெய்தால் நெல் மூட்டைகளை பாதுகாக்க விவசாயிகளுக்கு அரசு தார்ப்பாய்கள் வழங்க வேண்டும்.
சென்ற ஆண்டு தமிழ்நாடு முழுவதும் நல்ல மழை பெய்து, நெற்கதிர்கள் விளைச்சல் அமோகமாக உள்ளது.

இனிவரும் பிப்ரவரி மாத கால இறுதிக்குள் குறைந்தது சுமார் 30 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வரக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே, தமிழகத்தின் முதுகெலும்பான விவசாயிகளின் உழைப்பிற்கு தகுந்த பலன் கிடைத்தே தீர வேண்டும்.

ஆகவே ஆன்லைன் பதிவை கட்டாயமாக்காமல், ஏற்கெனவே உள்ள எளிய நடைமுறையின்படி, விவசாயிகள் தங்களது உழைப்புக்கு உண்டான பலனை பெறுவதற்கு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறக்கவும், தார்ப்பாய், சாக்கு, சணல் போன்ற பொருட்களை அதிகளவில் இருப்பு வைப்பதோடு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தேவைப்படும் அளவு பணியாட்களை நியமித்து, வியர்வை சிந்தி பாடுபட்ட விவசாயிகளின் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று இந்த விடியா தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.