• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் நாளை திறப்பு -காணொலி காட்சி மூலம் பிரதமர் தொடங்கி வைக்கிறார்

11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் நாளை திறப்பு -காணொலி காட்சி மூலம் பிரதமர் தொடங்கி வைக்கிறார்

January 11, 2022
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

October 5, 2026
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

October 5, 2026
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, October 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் நாளை திறப்பு -காணொலி காட்சி மூலம் பிரதமர் தொடங்கி வைக்கிறார்

by Namadhu Amma
January 11, 2022
in தற்போதைய செய்திகள்
0
11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் நாளை திறப்பு -காணொலி காட்சி மூலம் பிரதமர் தொடங்கி வைக்கிறார்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

புதுடெல்லி

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், செம்மொழி தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி நாளை காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார்.

புதிய மருத்துவக் கல்லூரிகள் ரூ.4,000 கோடி மதிப்பீட்டு செலவில் கட்டப்பட்டுள்ளன. இதில் ரூ.2,145 கோடி மத்திய அரசாலும் எஞ்சியத் தொகை தமிழ்நாடு அரசாலும் வழங்கப்பட்டது. விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம்,

திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி நாளை காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார்.

நாடு முழுவதும் மருத்துவ கல்வியை கட்டுப்படியானதாக அதிகரித்தல், சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் பிரதமரின் தொடர்ச்சியான முயற்சி அடிப்படையில் இந்த மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன.

மொத்தம் 1,450 இடங்களை கொண்ட புதிய மருத்துவக் கல்லூரிகள், ‘தற்போதுள்ள மாவட்ட,அவசர முதலுதவி மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கும்’ மத்திய அரசு ஆதரவிலான திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன. அரசு அல்லது தனியார் மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் இந்தத் திட்டத்தின் கீழ் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன.

இந்திய பாரம்பரியம், செம்மொழிகள் ஆகியவற்றை மேம்படுத்தி பாதுகாக்கும் பிரதமரின் தொலைநோக்கு திட்டத்தின் அடிப்படையில் சென்னையில், செம்மொழி தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் முழுமையான நிதியுதவியை கொண்ட புதிய வளாகம் ரூ.24 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதுவரை வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்த இந்த நிறுவனம், தற்போது மூன்று தளங்களை கொண்ட புதிய வளாகத்தில் செயல்படும். விசாலமான நூலகம், மின்னணு நூலகம், கருத்தரங்க கூடங்கள், பலவகை ஊடக அரங்கு, போன்றவற்றை புதிய வளாகம் கொண்டுள்ளது.

மத்திய கல்வித்துறையின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான செம்மொழி தமிழ் மத்திய நிறுவனம், ஆராய்ச்சி செயல்பாடுகள் மூலம், செம்மொழி தமிழ் மேம்பாட்டிற்கு பங்களிப்பு செய்கிறது.

இதன் மூலம் தமிழ் மொழியின் தொன்மையும், தனித்துவமும் நிறுவப்படுகிறது. இதன் நூலகத்தில் 45,000-க்கும் கூடுதலாக தொன்மையான தமிழ்நூல்கள், சேகரிக்கப்பட்டுள்ளன. செம்மொழி தமிழை மேம்படுத்தவும்,

அதன் மாணவர்களுக்கு உதவவும் இந்த நிறுவனம் கருத்தரங்குகள் நடத்துதல், பயிற்சித் திட்டங்கள், படிப்பு உதவித்தொகை வழங்குதல் போன்ற கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. ‘திருக்குறளை’ பல்வேறு இந்திய மொழிகளிலும், 100 வெளிநாட்டு மொழிகளிலும்
மொழி பெயர்த்து வெளியிடுவதையும் இது நோக்கமாக கொண்டுள்ளது. செம்மொழி தமிழை உலகம் முழுவதும் பரப்புவதற்கு உகந்த வகையில், பணியாற்றும் சூழலை கொண்டதாக இந்த புதிய வளாகம் இருக்கும்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.