• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech

கொரோனா பரவலை தடுக்க அரசுக்கு கழகம் யோசனை

January 11, 2022
நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

September 5, 2026
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

September 5, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

September 5, 2026
தவெக கூட்டணி அரசை கண்டித்து14-ம் தேதி தமிழகம் முழுவதும்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடியார் அறிவிப்பு

ஆசிரியர் தினத்தையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

September 5, 2026
48 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு கவுரவிப்பு

48 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு கவுரவிப்பு

September 5, 2026
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

September 5, 2026
பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

September 5, 2026
நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 616-ஆக உயர்வு; நூற்றுக்கணக்கானோர் மாயம்

நேபாள வெள்ள பலி 1,344 ஆக உயர்வு

September 5, 2026
தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

September 5, 2026
சஸ்பெண்டை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்

சஸ்பெண்டை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்

September 5, 2026
மாணவர் சேர்க்கையில் ஜாதி, மத விவரங்கள் கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

மாணவர் சேர்க்கையில் ஜாதி, மத விவரங்கள் கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

September 5, 2026
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Sunday, September 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

கொரோனா பரவலை தடுக்க அரசுக்கு கழகம் யோசனை

by Namadhu Amma
January 11, 2022
in சிறப்பு செய்திகள்
0
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை,

கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியா முழுவதும் 08-01-2022 அன்றைய நிலவரப்படி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,59,632 என்ற அளவிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 327 என்ற அளவிலும் இருக்கின்ற நிலையினை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு சில விலக்குகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அதனை மாநில அரசு ஊழியர்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.

மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக மத்திய அரசு பணியாளர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அளிக்கப்பட்டு உள்ளதாகவும், குறிப்பாக மத்திய அரசில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு அலுவலகம் செல்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும்,

இந்த விலக்கு 31-01-2022 வரை அமலில் இருக்கும்என்றும், வீட்டிலிருந்தே பணிபுரிய அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மத்திய அரசு ஊழியர்களை பொறுத்தவரையில் அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கும் கட்டுப்பாடுகள் நீங்கும் வரை அலுவலகம் வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாகவும், துணை செயலாளருக்கு கீழுள்ள பதவிகளை வகிக்கும் மத்திய அரசு ஊழியர்களை பொறுத்தவரையில், மொத்தமுள்ள பணியாளர்களில் 50 விழுக்காடு பணியாளர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வரவேண்டுமென்றும்,

மீதமுள்ளவர்கள் வீடுகளிலிருந்தே பணியாற்றலாம் என்றும், வீடுகளிலிருந்து பணியாற்றக்கூடியவர்கள் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளக்கூடியவர்களாக இருக்க வேண்டுமென்றும், அலுவலக கூட்டங்கள் அனைத்தும் காணொலி காட்சி மூலம் நடைபெற வேண்டும் என்றும்,

பார்வையாளர்கள் சந்திப்பை பொறுத்தவரையில், அவசியமற்ற சந்திப்புகள் தவிர்க்கப்பட வேண்டுமென்றும், பணியிடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டுமென்றும், இவை அனைத்தும் 31-01-2022 வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 08-01-2022 அன்று கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,978 ஆகவும், அதாவது கிட்டத்தட்ட எட்டு விழுக்காடும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆகவும் இருந்த நிலையில், 09-01-2022 அன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,895 ஆகவும், அதாவது 8.7 விழுக்காடாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆகவும் உயர்ந்துள்ளது.

ஒரு நாளைக்கு கூடுதலாக இரண்டாயிரம் பேர் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்படும் நிலைமை தற்போது உருவாகியுள்ளது. இது மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. கடந்த ஒரு வார காலமாக அரசு ஊழியர்கள் ஒருவித அச்சத்துடனேயே அலுவலங்களுக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள்.

கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி கொண்டிருக்கின்ற , சூழ்நிலையில், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தினால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களின் நலம் பாதுகாக்கப் படுவதோடு, அரசு ஊழியர்களை கொரோனா தொற்று பாதிப்பது கணிசமாக தடுக்கப்படும். மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசும் பின்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் நிலவுகிறது.

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து மத்திய அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு ஊழியர்களுக்கும் நீட்டிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

August 19, 2026
ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

August 19, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

September 5, 2026
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

September 5, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

September 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.