சேலம்
கீழே இருக்கிற சக்கரம் மேலே வரும். ஸ்டாலின் அவர்களே இந்த போக்கை கை விட்டுவிட்டு தேர்ந்தெடுத்த மக்களுக்கு நல்லது செய்யுங்கள். கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். பழிவாங்குகிற நோக்கத்தை நிறுத்துங்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விடியா தி.மு.க அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-
கழக ஆட்சியில் தானே புயல், கஜா புயல் உள்ளிட்ட எத்தனையோ புயல்களை பார்த்தோம். ஆனால் இன்று கனமழைக்கே சென்னை மிதக்கிறது. ஸ்டாலின் திரைப்படத்தில் நடிப்பதை போல போஸ் கொடுத்துவிட்டு சென்று விடுகிறார். நான்கு இடங்களை பார்க்கிறார் ஒரு டீயை குடிக்கிறார் உடனே சென்று விடுகிறார். தேங்கிய மழை நீரை வெளியெற்றுவதற்கு என்ன நடவடிக்கை எடுத்திர்கள்.
ஊதாரணத்திற்கு அவரது சட்டமன்ற தொகுதி கொளத்தூரில் 20 நாட்களுக்கு மேலாக 30 வீதிகளுக்கு மேல் தண்ணீர் தேங்கியது. சொந்த தொகுதியிலேயே மழைநீர் வடிகால் செய்யாமல் தேங்கிய நீரை அகற்றாமல் இருந்த ஒரே முதலமைச்சர் ஸ்டாலின். முன்னாள் இருந்த அரசாங்கத்தை குற்றம் சொல்கிறீர்கள், நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தால் இதனை தவிர்த்திருக்கலாம்.
இவர் ஒரு பொம்மை முதலமைச்சர், வடகிழக்கு பருவமழை என்றால் என்னவென்று தெரியாத முதலமைச்சர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் தான் தண்ணீர் தேங்குகிறது என்கிறார்.
இன்னொன்றும் சொல்கிறேன் தி.மு.க ஆட்சியின் ஒரே குறிக்கோள் கமிஷன், கலெக்சன், கரப்சன் தான்.
வடகிழக்கு பருவமழை துவங்கும் போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடித்திருக்க வேண்டும் ஆனால் இவர்கள் அப்பொழுது தான் பணியே தொடங்குகிறார்கள். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே எங்கெங்கல்லாம் தண்ணீர் தேங்கும் என்று அதிகாரிகளை விட்டு ஆய்வு செய்திருக்க வேண்டும் திறமையற்ற முதலமைச்சருக்கு அது தெரியவில்லை, நான் முதலமைச்சராக இருந்த பொழுது வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே எல்லா மாவட்ட ஆட்சித்தலைவர்களையும் அழைத்து 3 மாதத்திற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்கள் என கூறியதால் எவ்வளவு கனமழை பெய்தாலும் ஓரிரு நாட்களில் அந்த மழை வெள்ளத்தை அப்புறப்படுத்தி விடுவோம். ஆனால் தி.மு.க தலைவர் ஸ்டாலின் செய்ய தவறி விட்ட காரணத்தினாலே சென்னை பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கனமழையால் மழை நீர் தேங்கியதால் 4 நாட்கள் மின்சாரம் இல்லாமலும், குடிநீர், உணவு, குழந்தைகளுக்கு பால், மருத்துவ வசதி எதுவும் கிடைக்கவில்லை, ஆனால் கழக ஆட்சியில் துரித நடவடிக்கை எடுத்து எல்லா பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தினோம். ஆகவே தமிழகத்தில் இன்று மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஏழை எளிய மக்களின் மருத்துவ வசதிக்காக 2000 மினி கிளினிக்குகளை திறந்தோம், அதில் பணிபுரிந்த மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனா காலத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் சிறப்பாக செயல்பட்டு கொரோனா வைரஸில் இருந்து மக்களை காப்பாற்றினார்கள். அப்பேற்பட்ட மருத்துவ கிளினிக்கை மூடுவேன் என்கிறிர்கள் மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். மருத்துவத்தில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அற்புதமான திட்டத்தை கொண்டு வந்து கிராமப்புறத்திலே குடிசையிலே வாழுகின்ற மாணவ மாணவிகள் இன்றைக்கு மருத்துவ கல்லூரியிலே வாய்ப்பை உருவாக்கி தந்தது அம்மாவின் அரசு.
ஆசியாவிலே மிகப்பெரிய கால்நடை பூங்கா தலைவாசலிலே அமைத்திருக்றோம், இவையெல்லாம் ஸ்டாலினுக்கு தெரியவில்லை, நான்கு நாட்களுக்கு முன்பு வந்து சேலத்திலே பேசியபொழுது பட்டியலிட்டு அதிமுக எதையும் செய்யவில்லை என கூறினார். சேலத்திலே பாதாள சாக்கடை திட்டத்தை பாதியிலேயே விட்டு விட்டிர்கள், கால்வாய் சீரமைப்பு அதையும் நாங்கள்தான் செய்தோம். கழக ஆட்சியில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் 500 படுக்கை வசதிகள் கொண்ட மகப்பேறு மருத்துவமனை அமைக்கப்பட்டு பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவு தொடங்கினோம்.
எப்போதும் மின்சாரம் துண்டிக்காமல் இருப்பதற்காக பூமிக்கடியில் கேபிள் அமைக்கப்பட்து. ஐந்து ரோட்டில் உயர்மட்ட பாலம், திருவாக்கவுண்டனூர், செவ்வாய்பேட்டை, மாமாங்கம், முள்ளுவாடிகேட் ஆகிய பகுதிகளில் மேம்பாலம் அமைத்துள்ளோம். கிடப்பில் போடப்பட்ட ஆனந்தா பாலத்தையும் நாங்கள் தான் கட்டியமைத்தோம் இப்படி ஏராளமான பாலங்களை கட்டி கொடுத்தது அம்மாவுடைய அரசு. ஓமலூரில் இருந்து மேச்சேரி வரை நான்கு வழிச்சாலை. சேலத்தில் இருந்து திருப்பத்தூர் வரை நான்கு வழிச்சாலை. எல்லா சாலைகளும் சீரமைக்கப்பட்டது.
நம்முடைய ஸ்மார்ட் சிட்டி திட்டம் சிறப்பான திட்டம். சேலம் பழைய பேருந்து நிலையம் ஈரடுக்கு பேருந்து நிலையமாக 96.5 கோடியில் நிறைவேற்றியுள்ளோம். பெரியார் பேரங்காடி மேம்பாட்டு பணி 20 கோடி, பள்ளப்பட்டி ஏரி மறுசீரமைப்பு கழிவு கலப்பதை தடுத்திடும் கால்வாய் 30 கோடி, குமரகிரி 26 கோடி, தொங்கும் பூங்கா பல்நோக்கு கூடம் கட்டுதல் மற்றும் வாகனம் நிறுத்தம் 23 கோடி, எருமாபாளையம் பசுமைவெளி பூங்கா சுற்றிலும் சாலை அமைத்தது 23 கோடி, நேரு கலையரங்கம் மேம்பாடு 34 கோடி, சீர்மிகு நகரத்தில் குடிநீர் 24 மணி நேரமும் வழங்கிட 71 கோடி, நிலுவையில் உள்ள பாதாள சாக்கடை திட்டத்டதை நிறைவேற்றிட 110 கோடி, 5.5 மெகாவாட் சோளார் பேனல் அமைத்து மின்சாரம் தயாரிக்கும் பணிக்கு 30 கோடி, போஸ் மைதானம் மேம்பாடு பணி 10.5 கோடி, அம்மாவின் அரசு சேலம் மாநகரம் ஒரு சிறந்த அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட மாநகரமாக உருவாவதற்கு சுமார் 950 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதை ஸ்டாலினிக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்று வேண்டுமென்றே கழகத்தினர் மீது பொய் வழக்கு போடுகிறது தி.மு.க. அரசு. நீங்கள் எத்தனை வழக்குகள் போட்டாலும் நாங்கள் அஞ்சப்போவதில்லை. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்திலும், அம்மா காலத்திலும் வழக்கு போட்டீர்கள். அம்மாவின் மறைவுக்குப்பிறகு கழகத்தினர் மீது பொய் வழக்கு போடுகிறீர்கள். சட்டரீதியாக சந்தித்து வெல்வோம். முன்னாள் அமைச்சர்கள் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை பயன்படுத்தி, அரசு இயந்திரத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி முன்னாள் அமைச்சர்கள் வீடுகள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் ரெய்டு நடத்துகிறீர்கள். இதற்கெல்லாம் நாங்கள் பயப்படுவோமா? எங்கள் இரத்தத்தில் ஊறியிருக்கிறது வீரம். உடம்பில் ஒரு சொட்டு இரத்தம் இருக்கின்ற வரை கழகத்திற்கு உழைப்போம். எதிரிகளை வீழ்த்துவோம். நேரடியாக கழகத்தை சந்திக்க திராணியற்ற தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இப்படி அரசு இயந்திரத்தை, அரசு அதிகாரிகள், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை பயன்படுத்தி எங்களை மிரட்டப் பார்க்கிறார். உங்களது மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை கழகம்.
பெத்தநாயக்கன் பாளையம் பேரூர் கழக செயலாளர் வீடுகளில் கூட அதிகாரிகள் சோதனை இட முயற்சித்திருக்கிறார்கள். இது எப்படிப்பட்ட அரசாங்கமாக இருக்கிறது என்பதை ஊடக வாயிலாக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நானும் முதலமைச்சராக இருந்தேன். ஆட்சி மாறினால் காட்சி மாறும். திட்டமிட்டு அவது£று செய்திகளை பரப்பினால் அதற்கு தேவையான பதிலடியை கழகம் கொடுக்கும். கழகத்தினரை பழிவாங்கும் போக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். திமுக ஆட்சிப்பொறுப்பேற்று 7 மாதகாலம் நடைபெற்று விட்டது. 2024ல் பாரத பிரதமர் அடிக்கடி சொல்லி கொண்டே இருக்கிறார். ஒரே தேர்தல் ஒரே நாடு. இரண்டரை ஆண்டுகாலம் தான் ஆட்சி இருக்கும்.
கீழே இருக்கிற சக்கரம் மேலே வரும். ஸ்டாலின் அவர்களே இந்த போக்கை கை விட்டுவிட்டு தேர்ந்தெடுத்த மக்களுக்கு நல்லது செய்யுங்கள். கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். பழிவாங்குகிற நோக்கத்தை நிறுத்துங்கள். நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபொழுதில் இருந்து இதுவரை 6 முறை சிறை சென்றவன். இந்த மேடையில் உள்ள கழக நிரவாகிகள் அனைவரும் நாட்டு மக்களுக்காக சிறை சென்றவர்கள். ஆகவே எத்தகைய அச்சுறுத்தலுக்கும் அஞ்ச மாட்டோம்.
கழகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணி தொடரும். மக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் குரல் கொடுக்கிற முதல் கட்சி கழகம். கழகத்தை வீழ்த்த நினைத்தால் வீழ்ந்து போவார்கள். அழிக்க நினைத்தால் அடையாளம் காணாமல் போய்விடுவார்கள். கழகம் என்றைக்கும் மக்களுக்காக பாடுபடுகின்ற இயக்கம். வேண்டுமென்றே திட்டமிட்டு நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றாவிட்டால் மக்கள் மன்றத்தில் எடுத்துச்சொல்லி கண்டிப்பாக இன்னும் பல போராட்டங்கள் நடத்துவோம் நடத்துவோம்.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
















