முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி வழங்கி பாராட்டு
தென்காசி
படங்களை பார்த்து பெயர்களை கூறுவதில் அசாத்திய திறமை பெற்றதோடு விருதுகளை பெற்று சாதனை படைத்த 4 வயது சிறுவனுக்கு, முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி நினைவுப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் என்ஜிஓ காலனி பகுதியை சேர்ந்த தம்பதி சக்திவேல்-உமா மகேஸ்வரி. இவர்களின் மகன் சாய் தர்ஷித் (வயது 4). இவன் படங்களை பார்த்து பெயர்களை கூறுவதில் திறமைகளை வெளிப்படுத்தி உள்ளார். இந்நிலையில் 40 நாடுகளின் தேசிய கொடி, வாகனங்கள், மனித உறுப்புகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களை காட்டவும் வரிசையாக பெயர்களை கூறி உள்ளான் சிறுவன் சாய் தர்ஷித்.
இந்த சாதனையை இணையதளம் மூலமாக பதிவேற்றியதால் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு மற்றும் கலாம் வேல்ர்டு ரெக்கார்டு ஆகியவற்றின் சார்பில் விருதுகளை சிறுவன் சாய் தர்ஷித் படைத்து உள்ளான். அந்த சிறுவனின் திறமையை ஊக்கப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சரும், கழக மகளிரணி துணை செயலாளருமான வி.எம்.ராஜலட்சுமி சாய் தர்ஷித் இல்லத்திற்கு நேரில் சென்று அவனை பாராட்டினார்.
அப்போது அவர் சிறுவனுக்கு நினைவு பரிசு வழங்கினார். இந்த நிகழ்வின் போது மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கண்ணன் எ.ராஜூ, கூட்டுறவு சங்க தலைவர் வேல்சாமி, நகர செயலாளர் ஆறுமுகம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மனோ, கிளை செயலாளர் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.


















