• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
3-ம் கட்ட கழக அமைப்பு தேர்தல் – கழக நிர்வாகிகள்- தொண்டர்கள் போட்டி போட்டு விருப்ப மனு

3-ம் கட்ட கழக அமைப்பு தேர்தல் – கழக நிர்வாகிகள்- தொண்டர்கள் போட்டி போட்டு விருப்ப மனு

March 28, 2022
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

October 17, 2026
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

October 17, 2026
தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!

தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!

October 17, 2026
கோவையில் மழையால் மக்கள் கடும் அவதி – களத்தில் இறங்கி உதவிக்கரம் நீட்டிய எஸ்.பி. வேலுமணி!

கோவையில் மழையால் மக்கள் கடும் அவதி – களத்தில் இறங்கி உதவிக்கரம் நீட்டிய எஸ்.பி. வேலுமணி!

October 16, 2026
ஜெம் வீரமணி வழக்கு: “தொடர்புடைய அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை” – அதிமுக பொதுச் செயலாளர்

அதிமுகவை எந்தச் சூழ்ச்சியாலும் வீழ்த்த முடியாது – எடப்பாடி பழனிசாமி

October 16, 2026
மதுரை கும்பாபிஷேக விழா: பக்தர்கள் வசதிக்காக 285 சிறப்பு பேருந்துகள்

ஆயுத பூஜை விடுமுறை எதிரொலி: சென்னையில் இருந்து இன்று 2,194 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

October 16, 2026
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க புதிய நடைமுறை! தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாடு!

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க புதிய நடைமுறை! தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாடு!

October 16, 2026
ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும்

ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும்

October 16, 2026
மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி

மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி

October 16, 2026
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை எதிரொலி: மறைமலை நகரில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை எதிரொலி: மறைமலை நகரில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு

October 16, 2026
ரேஷன் கடைகளில் 2 மாதங்களுக்கான அரிசி, பருப்பு முன்கூட்டியே வழங்க முடிவு!

ரேஷன் கடைகளில் 2 மாதங்களுக்கான அரிசி, பருப்பு முன்கூட்டியே வழங்க முடிவு!

October 16, 2026
அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை கோரி ஆளுநரிடம் அதிமுக பரபரப்பு புகார்!

அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை கோரி ஆளுநரிடம் அதிமுக பரபரப்பு புகார்!

October 15, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, October 20, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

3-ம் கட்ட கழக அமைப்பு தேர்தல் – கழக நிர்வாகிகள்- தொண்டர்கள் போட்டி போட்டு விருப்ப மனு

by Namadhu Amma
March 28, 2022
in சிறப்பு செய்திகள்
0
3-ம் கட்ட கழக அமைப்பு தேர்தல் – கழக நிர்வாகிகள்- தொண்டர்கள் போட்டி போட்டு விருப்ப மனு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை

மூன்றாவது கட்ட கழக அமைப்பு தேர்தல் நேற்று நடைபெற்றது. ஒன்றிய கழக நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், பேரூராட்சி கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கு கழக நிர்வாகிகள், ெதாண்டர்கள் போட்டி போட்டு விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கழக அமைப்பு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலும், இரண்டாம் கட்டமாக கிளை கழக நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு கழக நிர்வாகிகள், நகர வார்டு கழக நிர்வாகிகள், மாநகராட்சி வட்ட கழக நிர்வாகிகள் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதன்படி 3-ம் கட்டமாக ராணிப்பேட்டை, வேலூர் மாநகர், வேலூர் புறநகர், திருப்பத்தூர், திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,

சேலம் புறநகர், சேலம் மாநகர், தருமபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, நாமக்கல், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு, திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு, திருப்பூர் புறநகர் மேற்கு, கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு, நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், பேரூராட்சி கழக நிர்வாகிகள்,

பகுதி கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கு மார்ச் 27-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர்.

அதன்படி நேற்று மேற்கண்ட மாவட்டங்களில் 3-ம் கட்ட கழக அமைப்பு தேர்தல் நடைபெற்றது. காலை 10 மணிக்கு தேர்தல் தொடங்கியதும் ஒன்றிய கழக நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், பேரூராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் போட்டி போட்டு விருப்ப மனுக்களை உரிய கட்டணம் செலுத்தி பெற்று பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களிடம் வழங்கினர்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஓமலூரில் உள்ள நடராஜ செட்டியார் திருமண மண்டபம், ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகம் ஆகிய இரண்டு இடங்களில் கழக நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களான புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவரும், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான பி.கே.வைரமுத்து, கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.செம்மலை,

சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், தமிழ்நாடு தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜமுத்து, ஜெயங்கரன், சித்ரா, நல்லதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் தேர்தல் நடைபெறும் 25 மாவட்டங்களில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

October 17, 2026
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

October 17, 2026
தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!

தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!

October 17, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.