சென்னை:-
ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-
ஸ்ரீநகரில் காவல்துறை பேருந்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் இரண்டு காவலர்கள் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர் என்ற செய்தியை அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியும், ஆற்றொணா துயரமும் அடைந்தேன்.
இந்தியாவில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையை குலைக்கும் வகையில் நடத்தப்பட்ட பேடித்தனமான கொடூர தாக்குதலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
படுகாயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய எல்லாம்வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன். இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


















