• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10,000 நிதியுதவி – முதலமைச்சருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

January 5, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Thursday, February 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10,000 நிதியுதவி – முதலமைச்சருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

by Namadhu Amma
January 5, 2022
in சிறப்பு செய்திகள்
0
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்ற ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெருமழை பெய்ததன் காரணமாக தமிழ்நாட்டில், பெரும்பாலான பகுதிகளில் தெருக்களிலும், வீடுகளிலும் மழைநீர் புகுந்து மக்களின் உடைமைகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது.

இந்த பாதிப்பிற்கு இதுவரை எவ்வித நிதியுதவியும் அளிக்காத நிலையில், 30-12-2021 அன்று சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள மாவட்டங்களில் வரலாறு காணாத மிகப்பெரிய கனமழை பெய்து மக்களுக்கு ஆற்றொணா துயரத்தினை அளித்து, கூடுதல் நிதி சுமையினை ஏற்படுத்தியுள்ளது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடியது.

சென்னையில் 30-12-2021 அன்று பிற்பகல் 12-15 மணிக்கு தொடங்கிய மழை இரவு வரை தொடர்ந்து விடாமல் பெய்ததன் விளைவாக சென்னை மாநகரமே வெள்ளத்தில் மிதந்துள்ளது. சென்னை வாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்து விட்டது.

தியாகராய நகர், கே.கே. நகர், அசோக் நகர், வேளச்சேரி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், எக்மோர், தேனாம்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கோபாலபுரம், பாரிமுனை, அடையாறு, சைதாப்பேட்டை, கிண்டி, திருவான்மியூர், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளும் ஆறு போல் காட்சியளித்தது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்களின் உடைமைகள் சேதம் அடைந்துள்ளன.

இதுகுறித்த முன்னறிவிப்பு ஏதுமில்லாததால் மக்கள் செய்வதறியாது திகைத்தனர். அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் எல்லாம் ஆறு போல் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.

மேட்லி சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை, கெங்குரெட்டி சுரங்கப்பாதை ஆகியவை மூடப்பட்டதால், வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. இதன் விளைவாகவும், பல சாலைகள் ஆறு போல் காட்சி அளித்ததன் காரணமாகவும், பத்து நிமிடத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு இரண்டு மணி நேரம் ஆகியது. இரு சக்கர வாகனங்கள் பழுதடைந்ததன் காரணமாக, பல வாகன ஓட்டிகள் வாகனங்களை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு நடந்தும், ரயில் மூலமாகவும் தங்கள் இல்லம் சென்றடைந்து இருக்கின்றனர்.

அலுவலகங்களிலிருந்து வீடு திரும்புவது என்பது மிகப்பெரிய சவாலாகி விட்டது. அனைத்து மக்களும் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்திருக்கிறார்கள்.

ஏற்கனவே பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக தற்போது பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இரண்டு பாதிப்புகளுக்கும் நிதியுதவி அளிக்க வேண்டிய கடமை தி.மு.க. அரசுக்கு உள்ளது. அந்த கடமையை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

2015-ம் ஆண்டு இதேபோன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எந்தெந்த தெருக்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு இருந்ததோ, அந்த தெருக்களில் வசிக்கும் எல்லோருக்கும், எவ்வித வித்தியாசமுமின்றி 5,000 ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

ஆனால் 2021 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த மழை காரணமாகவும், 30-12-2021 அன்று தமிழக கடற்கரையோரம் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் இரண்டு முறை மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஏற்கனவே தெருக்களில் மழைநீர் தேங்கி இருந்ததன் காரணமாகவும், வீடுகளில் மழைநீர் புகுந்ததன் விளைவாகவும் இருபதாயிரம் ரூபாய்க்கு மேல் ஒவ்வொரு குடும்பத்தினரும் செலவழித்துள்ளனர். தற்போது மீண்டும் அதே செலவை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

2015-ம் ஆண்டே 5,000 ரூபாய் நிவாரணமாக அளிக்கப்பட்டு இருப்பதையும், தற்போது விலைவாசி பன் மடங்கு உயர்ந்திருப்பதையும் கருத்தில் கொண்டு பார்த்தால், 10,000 ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட வேண்டும்.

இருப்பினும் குறைந்தபட்சம் 2015-ம் ஆண்டு அளித்த 5,000 ரூபாய் நிவாரணத்தையாவது அளிக்க வேண்டும் என்பதும், இரண்டு முறை பாதிக்கப்பட்டதால் 10,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்பதும் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

எனவே, பொதுமக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையிலும், மக்களின் பாதிப்பினை ஓரளவு குறைக்கும் வகையிலும், ஒருமுறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5,000 ரூபாய் நிதியுதவியும், இரண்டு முறை பாதிக்கப்பட்டவர்களுக்கு 10,000 ரூபாய் நிதியுதவியும் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.